மாயன் காலண்டர் டிசம்பர் 21 ஆம் தேதியோடு நிறைவுற்று உலகை பயமுறுத்திக் கொண்டிருக்க, உலகம் ஏன் அழியக்கூடாது??
* லாண்டரிக்கு போட்ட துணியெல்லாம் வர்ற 26 ஆம் தேதிதான் டெலிவரி
* புதுசா ஹமாம் சோப்பும், பேட்டா செருப்பும் வாங்கி ஒரு வாரம் கூட ஆகல
* எதுத்த வீட்ல தெத்துப்பல் பானுமதி என்னை திரும்பி பார்க்க ஆரம்பிச்சு 4 நாள்தான் ஆகுது
* 26 தான் என்னோட சம்பள தேதி
* எப்போது வேண்டுமானாலும் என்னை கடித்துவிடும் அபாயத்திலிருந்த எங்கள் தெரு நாய்க்கு ஒரு வாரமாய் பிஸ்கட் வாங்கிப் போட்டு இப்போதான் கரக்ட் செஞ்சிருக்கேன்
* காஃபி பொடி தீர்ந்து போக குறைந்தது ஒரு மாதமாவது ஆகும்
* புது வீடு மாற அட்வான்ஸ் கொடுத்துட்டேன் திருப்பிக் கேட்டா வெலக்குமாத்துலையெ அடிப்பான்
* புதிதாக கவிதை எழுதத் தொடங்கி இருக்கிறேன் அது புத்தகமாகி வெளிவரும் வரை நீங்கள் இருக்கணுமே (எப்படியும் படித்த பின் இல்லாமல் போய் விடுவீர்கள்)
* புதிதாக எங்க ஊர்ல ரோடு போட்டிருக்கிறார்கள், ரோடு அழிய இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகலாம்
* மனைவி ஊருக்கு போயிருக்கிறாள் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம்
* கடல் படம் இன்னும் ரலீஸ் ஆகல தீவிர ராதா ரசிகனான நான், ராதாவோட ரெண்டாவது பொன்னையும் பாத்துட்டா ஜென்ம சாபல்யம் அடைந்சுடுவேன்
* இன்னும் தேமுதிகவின் அனைத்து எம் எல் ஏக்களும் அம்மா கூட நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை
* சென்னையின் மெட்ரோ ட்ரைன் ப்ராஜெக்ட் இன்னும் முடியல
* நயன்தாராவோட அடுத்த காதலன் யாருன்னு இன்னும் தெளிவா தெரியல
* இன்னும் ஒருவாட்டி கூட சாகல...
* ரஜினியோட அடுத்த படத்தோட ஹீரோயின் எந்த ஹாஸ்பிட்டல்ல பிறக்கும்னு தெரியல
* பிரபுவோட புரட்சி போராட்டம் இன்னும் மிச்சம் இருக்கு
இதே போன்ற காரணங்கள் நிறையவே இருக்கின்றன ஏன் உலகம் அழியக்கூடாது என்பதற்கு, அழிந்தால்தால்தான் என்ன?? என்ற கேள்விக்கு தவணை பணம், கொசுத் தொல்லை, பவர் கட் போன்ற சின்ன சின்ன காரணங்கள் இருந்தாலும், எனக்கு இருக்கும் ஒரே காரணம் மச்சினிச்சிக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி விட்டது
இந்த உலகம் அழிந்தால்தான் என்ன??
No comments:
Post a Comment
அடிச்சு.... துவைங்க....